எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது கோப் குழு!

0
20

கோப் குழு எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் தடவையாக கூடவுள்ளது.

முதல் நாளில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதானிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கோப் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளுங்கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 15 ஆகும்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி இதுவரை எவரும் பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.