ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்காக மூவரடங்கிய புதிய நீதிபதிகள் ஆயம் ஒன்றைப் பெயரிடுமாறு பிரதம நீதியரசரிடம் பரிந்துரைக்குமாறுஇ சட்டமா அதிபர் முன்வைத்த கோரிக்கைஇ கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்தினால் நிராகரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகிய பிரதிவாதிகளை அழைக்காது அவர்களைக் குற்றமற்றவர்களாக அறிவித்து விடுவிப்பதற்குக் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் முன்னதாக உத்தரவிட்டது.
பிரதிவாதிகளை அழைக்காமல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து விடுதலை செய்வதற்குக் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அதை வலுவற்றதாக்குமாறு கோரி சட்டமா அதிபரால் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
குறித்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்றம்இ பிரதிவாதிகளை அழைக்காமல் அவர்களைக் குற்றமற்றவர்களாக அறிவித்து விடுவிப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயம் மேற்கொண்ட தீர்மானம் சட்டத்துக்கு புறம்பானது எனவும்இ குறித்த வழக்கை மீண்டும் அழைத்துஇ புதிதாக தீர்ப்பை அறிவிக்குமாறும் கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் ஆயத்துக்கு உத்தரவிட்டது.
குறித்த வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதுஇ விசாரணைகள் புதிய நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் நடத்தப்பட வேண்டும் என சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையாகியிருந்த பிரதி மன்றாடியர் நாயகம் சுதர்ஷன டி சில்வா மற்றும் மேலதிக மன்றாடியர் நாயகம் தீலிப பீரிஸ் ஆகியோர் கோரியிருந்தனர்.
இதற்கு எதிர்ப்பை வெளியிட்ட பிரதிவாதியான பூஜித் ஜயசுந்தர சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிஇ இவ்வாறான கோரிக்கைகளை முன்வைப்பதற்குச் சட்டத்தில் எந்த சந்தர்ப்பமும் வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதிபதி ஆயம் குறித்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.