ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டு

0
19

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இராஜதந்திர சிறப்புக் குழு எதிர்வரும் 23ஆம் திகதி ஜெனிவாவுக்கு விஜயம் செய்கிறது.
இலங்கைக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்ப்பிக்க உள்ளதுடன், சிறுபான்மை மக்களின்
உரிமைகளைப் பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுபடுத்தலை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள
நிலையில், மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் தீர்மானத்தின் 51 க்கு 1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும்,
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது.