ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் காரியாலயம் கிரான்குளம் பகுதியில் இன்று திறந்துவைக்கப்படது. சஜித் பிரேமதாசவின் தேர்தல் செயற்பாட்டினை நோக்காக கொண்டு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும் மாவட்ட தேர்தல் ஒருங்கிணைப்பாளருமான த.தயாநந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என
பலரும் கலந்துகொண்டனர்.