ஐபிஎல் போட்டியைப் பலரும் விரும்பிப் பார்ப்பதற்கு முக்கியக் காரணம் – சிக்ஸர் மழை.
கடந்த வருடம் ரஸ்ஸல் அடித்த சிக்ஸர்களை யாரால் மறக்க முடியும்? கடைசி ஓவரில் தோனி விளையாடினாலே அனைவரின் மனமும் சிக்ஸர்களைத் தானே விரும்பும்?
அதுவும் 20-வது ஓவரின் கடைசிப் பந்தில் யார் விளையாடினாலும் அவர் சிக்ஸர் தான் அடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த எதிர்பார்ப்பை அதிக முறை பூர்த்தி செய்த வீரர்கள் யார் யார்?
20-வது ஓவரின் கடைசிப் பந்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்
8 – தோனி (34 பந்துகள்)
4 – பென் கட்டிங் (5)
4 – ரோஹித் சர்மா (13)
4 – பொலார்ட் (17)
கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிக்காக துபை, அபுதாபிக்குச் சென்றுள்ள அனைத்து அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.