கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பர்கியூஷன் வீதியில் ஐஸ் போதைப்பொருள், பணத்துடன் பெண் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணிடமிருந்து 33 கிராம் 270 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1,14,900 ரூபா பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.