ஐ.தே.க- ஐ.ம.ச உடன்பாடு!

0
7

எதிர்க்கட்சி பெரும்பான்மையாக உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து பணியாற்றவும் நிர்வகிக்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் (UNP) சமகி ஜன பலவேகயவும் (SJB) ​(ஐக்கிய மக்கள் சக்தி)  ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன.

இரு கட்சிகளும் மற்ற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளதாக, சமகி ஜன பலவேகயின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல ஆகியோர்  கையொப்பமிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.