அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் ஏற்படும் கடலரிப்பினால்;, கடற்கரைச் சூழல் சிதைவடைந்து வருவதோடு, மீனவர்களும்
சொல்லனாத் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
கரையோரப் பகுதிகளை அண்டிக் காணப்பட்ட தென்னந் தோப்புக்களும், கடலரிப்பினால் அழிவடைந்து வருவதால், தெங்குப் பயிர்ச் செய்கையாளர்களும்
வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுட்டுள்ளது.
அத்தோடு தென்னை மர நிழலில், தோணிகள், படகுகளை சரிபார்க்கும் மீனவர்களும் இயற்கையான நிழல் இன்றி சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஒலுவில் பகுதியில் அமைக்கப்படும் துறைமுகமும் ஒரு காரணம் என பிரதேச மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடலரிப்புத் தொடர்பில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.