கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுரம் மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று நீதிமன்றத்துக்கு சென்று வந்த பின்னரே
அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் நடந்த இராணுவத்தின் கொடூரமான செயற்பாடுகளை பொது வெளியில் பேசியதாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக சதி செய்தேன் என்ற அடிப்படையில் எம்மை கைது செய்தார்கள் என குறிப்பிட்ட செல்வம் எம்.பி கடந்த 16 ஆம் திகதி வழக்கிற்கு சமூகமளிக்காததால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதன்போது 25 ஆயிரம் ரூபாய் ஆட்பிணையும், கடவுச்சீட்டை ஒப்படைக்கவேண்டும் எனவும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டிருந்ததாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.