கனடா செல்ல காத்திருந்த இளைஞர் சடலமாக மீட்பு!

0
150

முல்லைத்தீவு மல்லாவி பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், வவுனிக்குளத்தில் இருந்து, இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.யோகபுரம் மல்லாவி பகுதியை சேர்ந்த, 27 வயதான ஆனந்தரசா ஜீவன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல், 20 இலட்சம் ரூபா பணத்துடன், யோகபுரத்தில் இருந்து பாண்டியன் குளத்திற்கு சென்ற இளைஞர், இரவு 8.40 மணி வரை, நண்பர்களுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், அதன் பின்னர் அவரது தொலைபேசியை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதனையடுத்து, நண்பர்கள் இணைந்து குறித்த இளைஞரை தேடிய போது, இன்று அதிகாலை 3.00 மணியளவில், பாண்டியன்குளம் குளக்கரையில் மோட்டார் சைக்கில் இனங்காணப்பட்டது.தொடர்ந்து இளைஞரை தேடிய போது,வவுனிக்குளத்தின் மூன்றாது நீர் சுருங்கையில், சடலம் இனங்காணப்பட்டு, பிரதேச மக்களால் வெளியில் எடுக்கப்பட்டது.

அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த பாண்டியன்குளம் பொலிஸார், நீதிபதி முன்னிலையில் சடலத்தை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறித்த இளைஞர், வெளிநாடு செல்லக் காத்திருந்ததாக தெரியவருகின்றது.