32 C
Colombo
Friday, March 29, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கல்முனை பிரதேச செயலகத்தில்
இரு நாட்கள் நேர்முகப்பரீட்சை

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களாக கல்முனைப் பிதேச செயலகத்தில் இணைப்புச் செய்யப்பட்டு பலதரப்பட்ட காரியாலயங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களின் தகைமைகளை உறுதிப்படுத்தும் நேர்முகப்பரீட்சை இரு நாட்களாக கல்முனை பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனைப் பிரதேச செயலாளர் ஜனாப் லியாகத்தலி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந் நேர்முகப்பரீட்சையில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஜப்ரினால் முதல்கட்டமாக தோற்றிய 10 பணியாளர்களின் தகைமைகள் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசீலிக்கப்பட்டது.மேலும் ஏனைய 10 பணியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை நேற்று இடம்பெற்றது.

குறித்த நேர்முகப்பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பல்நோக்கு அபிவிருத்தித் திணைக்களத்தின் சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் அபுல் ஹசனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பயிற்சிக்காலத்தை முடித்துகொண்ட பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்கள் தேசிய தொழிற் தகைமை உடையவர்களாக என்.வி.கு நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொள்வதற்கான முன்னோடி நேர்முகப் பரீட்சையாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles