களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கித்துலாவ பிரதேசத்தில் 10 வாள்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கித்துலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 மற்றும் 30 வயதான இருவரே கைது செய்யப்பட்டனர்.
இந்த வாள்கள் அனைத்தும் குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.