அரியாலையில் கள்ள மணல் அள்ளும் போது, சுவர் இந்து விழுந்து, நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், அரியாலை, நாவலடி பகுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் கள்ள மணல் அள்ளும் போது, வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாவலடி பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றன்.