24 C
Colombo
Friday, December 6, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் நியமனத்துக்கு விண்ணப்பம் கோரல்

2016ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலக உறுப்பினர் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக தகைமை உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதற்காக www.parliament.lk எனும் பாராளுமன்ற இணையத்தளத்தில் கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம் என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விண்ணப்பங்கள் தயாரிக்கப்படல் வேண்டும்.

அதற்கமைய, பூர்த்தியாக்கப்பட்ட விண்ணப்பங்களை 2024 டிசம்பர் 09 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர், அரசியலமைப்புப் பேரவையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே எனும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அல்லது constitutionalcouncil@parliament.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles