31 C
Colombo
Thursday, March 30, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

காணி அபகரிப்புகளை தடுக்க சட்ட நடவடிக்கைகள்

எதிர்காலத்தில் நாட்டில் காணி அபகரிப்புக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்கு வாய்ப்பு உள்ள தொல்பொருள் முக்கியத்துவம் மிக்க இடங்கள் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள்/ அரசாங்க அதிபர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேபோல், ´நில விவகாரத்தில், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் அரச அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்´ என, பாதுகாப்பு செயலர் வலியுறுத்தினார்.

எமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பொய்யான பரப்புரைகளை பொருட்படுத்தாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக எமது பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்லவுள்ளோம் என மேஜர் ஜெனரல் குணரத்ன மீண்டும் வலியுறுத்தினார்.

நாரஹென்பிட்டவில் உள்ள உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் நேற்று (15) நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், அரசாங்க அதிபர்களுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாதுகாப்புச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், ´கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவும் நிலைமை தொடர்பாக எனது கவனத்திற்கு கொண்டு வந்ததன் விளைவாக, உரிய அதிகாரிகளுடன் எங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக ஒருங்கிணைக்க முடிந்தது´ என தெரிவித்தார்.

பாதுகாப்பு படைகள், சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரச நிர்வாக சேவை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டில் காணப்பட்ட முன்னைய கொரோனா வைரஸ் மூன்று அலைகளையும் எம்மால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

திறைசேரி செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல்...

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடலை அதிகரிக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனைவரும் இந்துவாக திரட்சிபெற வேண்டும்!

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவனாலய விவகாரத்தைத் தொடர்ந்து பல பக்கங்களிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறான கண்டனங்கள் வழமையானவை.இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது, கண்டனங்களை முன்வைப்பதும் - பின்னர் சில நாட்கள் - வாரங்களுக்கு...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

திறைசேரி செயலாளர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மே 22ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

திறைசேரி செயலாளருக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தாக்கல்...

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடலை அதிகரிக்கும் செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் நோக்கில், முன்னெடுக்கப்படும் செயற்திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அனைவரும் இந்துவாக திரட்சிபெற வேண்டும்!

வெடுக்குநாறி மலையிலுள்ள சிவனாலய விவகாரத்தைத் தொடர்ந்து பல பக்கங்களிலும் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.இவ்வாறான கண்டனங்கள் வழமையானவை.இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது, கண்டனங்களை முன்வைப்பதும் - பின்னர் சில நாட்கள் - வாரங்களுக்கு...

இப்படியும் நடக்கிறது…!

நீச்சல் குளத்தில் தண்ணீர் அடிக்கடி கெட்டுவிடுவதை அறிந்தார் ஹோட்டல் முதலாளி.காவல்காரனை அழைத்து ஒரு வாரத்துக்கு யாரையும் நீச்சல் குளத்தில் குளிக்க அனுமதிக்காதே, என்றார்.அன்று மாலையே இளம் பெண் ஒருத்தி குளிப்பதற்காக...

சவேந்திர சில்வாவை வெளியேற்றும் தீவிர முயற்சியில் மஹிந்த கும்பல்

பாதுகாப்புப் படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவை அந்தப் பதவியில் இருந்து நீக்குவதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷ தலைமையினலான ஸ்ரீலங்கா...