அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட
காரைதீவு பிரதேசத்துக்கு இராணுவத்தினர் பௌஸர் மூலம் குடிநீர் வழங்கி வருகின்றனர்.
கடந்த 11 நாட்களாக ஆலயங்கள், பிரதேச சபை, பொது அமைப்புகள், தனியார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குடிநீர் வழங்கி வந்தனர்.
தற்போது இராணுவத்தினரும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.