30 C
Colombo
Sunday, September 24, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதிக்கு அழைப்பு

ஐக்கிய நாடுகளின் 28ஆவது காலநிலை மாற்ற மாநாட்டில் (COP 28) பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் (Mohamed bin Zayed Al Nahyan) அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதம்,  ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலீத் நாசர் அல் அமெரியினால் நேற்று (22) ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாடு (COP 28) எதிர்வரும் நவம்பர் 30 முதல்  டுபாயில் உள்ள எக்ஸ்போ சிட்டியில் உலகத் தலைவர்கள், அரச பிரதிநிதிகள், சூழலியலாளர்கள், புத்துஜீவிகள் ஆகியோரின் பங்களிப்புடன் ஆரம்பமாகிறது.ஜக்கிய அரபு இராச்சியத்தின் 52 ஆவது தேசிய தின விழாவுடன் இணைந்ததாக அரச தலைவர்கள் மாநாடு டிசம்பர் 01 முதல் 02 ஆம் திகதி வரை நடைபெறும்.

காலநிலை மாற்றம் மற்றும் நாடுகள் அதை எவ்வாறு சமாளிக்க திட்டமிட்டுள்ளன என்பது குறித்த உரையாடலுக்கான முன்னணி சர்வதேச தளமாக காலநிலை மாற்ற உச்சிமாநாடு செயல்படுகிறது.

மேலும், காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு உடன்பாட்டில் (UNFCCC) இணைந்துள்ள உறுப்பு நாடுகளிடையே, காலநிலை மாற்றம் குறித்த கலந்துரையாடல்களை வழிநடத்துவதில் இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கிறது.

மாற்றத்திற்கான கூட்டு செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அனைத்து பங்குதாரர்களுக்கும் புதிய, சமமான தீர்வுகளுக்கு பங்களிப்பைப் பெறுவதும், சமமான வாய்ப்புகளை வழங்குவதும் இந்த மாநாட்டின் குறிக்கோளாகும்.உலகளவில் நிலையான பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்கும் அனைத்து உறுப்பு நாடுகளின் கூட்டு அர்ப்பணிப்பின் முக்கியத்துவத்தையும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படுகிறது.

காலநிலை மாற்றத்தை கையாள்வதில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தியுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்களை சமாளிப்பதில் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.

மேலும், இந்த அழைப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொண்டமை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான், இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

Related Articles

எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

யாரையும் தாக்கி காயப்படுத்த வேண்டாம் – பொலிஸில் முறையிடுங்கள்

பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது அவர்களைப் பற்றி அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ்...

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை

கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவையே. கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டாலும் அந்த ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் தணிந்துபோய்விட்டதாக கூறமுடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

எபிரஸ் பேர்க்ஸ்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவு திறைசேரிக்கு வழங்கிவைப்பு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ பற்றியதால் ஏற்பட்ட பாதிப்புக்கு இடைக்கால கொடுப்பனவாக 8,90,000 அமெரிக்க டொலர் திரைசேறிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். 

யாரையும் தாக்கி காயப்படுத்த வேண்டாம் – பொலிஸில் முறையிடுங்கள்

பல்பொருள் அங்காடிகளிலோ அல்லது வேறு கடைகளிலோ பொருட்களைத் திருடும் நபர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாது அவர்களைப் பற்றி அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவித்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு சிரேஷ்ட பொலிஸ்...

மீண்டும் ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் குறித்து ஒரு பார்வை

கடந்த வருடம் மக்கள் கிளர்ச்சியின்போது தவறான ஆட்சிமுறைக்கு எதிராக எழுந்த முழக்கங்கள் அடிப்படையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு எதிரானவையே. கிளர்ச்சி அடக்கி யொடுக்கப்பட்டாலும் அந்த ஆட்சிமுறை ஒழிப்பின் அவசியம் தணிந்துபோய்விட்டதாக கூறமுடியாது.

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்களின் போராட்டம் 10 நாளாக இன்றும் தொடர்ந்தது..

மட்டக்களப்பில் கால்நடைப் பண்ணையாளர்கள், மயிலத்தமடு மற்றும் மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கக் கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 10 வது நாளை எட்டியுள்ளது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் ஏற்பாட்;டில் இரத்ததான முகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்ததான முகாமொன்று இன்று பாலமுனை அலகார் பாடசாலை மண்டபத்தில்நடைபெற்றது.பாலமுனை நெஷனல் விளையாட்டுக்கழத்தின் தலைவர் எம்.எம்.ஏ முரீத் தலைமையில் நடைபெற்ற...