26 C
Colombo
Thursday, March 28, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிராமிய அமைப்பாளர்கள் சந்திப்பு
;கல்முனையில் தனியார் விடுதியில் நடைபெற்றது

சமகால அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் கிராமிய அமைப்பாளர்கள் சந்திப்பு தொடர்பில் அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றதுடன் ஒவ்வொரு கிராமமும் தனித் தனியாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும் என ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்தார்.மேலும் அவர் தெரிவித்ததாவது

நாங்கள் கிட்டத்தட்ட 62 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம்.ஆனால் தமிழ் மக்களுக்கு வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாக போராடி நிறைய விடங்களை சாதித்திருக்கின்றார்கள்.இன்றும் கூட தமிழ் மக்களின் பிரதேசங்களில் காணிகள் கையகப்படும் சந்தரப்பங்கள் இருந்து வருகின்ற நிலையில் அதற்கு காரணமானவர்களை ஒன்று கூடி அவர்கள் விரட்டி அடிக்கின்றார்கள்.ஆனால் அம்மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமை எங்களிடத்தில் இல்லை.ஆனால் எமது ஊர்கள் யாவும் தற்போது ஒரு தனியான தீவுகளாக மாற்றப்பட்டுள்ளன.இவ்வாறான பிரதேச வாதங்களினால் தான் வெளியூர் தலைவர்கள் என கூறப்படுபவர்கள் இங்கு வந்து எமக்கு மேல் நின்று கொண்டு எங்களது பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் வித்தியாசமான அரசியலை செய்கின்றார்கள்.இதற்கு பிரதான காரணம் பிரதேசவாதமாகும் என தெரிவித்தார்.

அத்துடன் இந்த சமூகத்தில் உள்ள ஊழல்வாதிகள் பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை முஸ்லீம்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுக்காமல் அதை அப்படியே மானபங்க படுத்தி பெரும்பான்மை சமூகத்திற்கு விட்டு கொடுத்து தங்களை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை தேடிக் கொள்கின்ற அந்த கேவலமான செயல்களில் இருந்து நாங்கள் விடுபட வேண்டும்.வாக்குகளை வாங்குவதற்கு எதையுமே தர மாட்டோம்.கொள்கைகளை மட்டும் பேசுவோம்.

இன்று அஸ்ரப் அவர்களின் கொள்கையினை மீறி கிழக்கு முஸ்லீம் மக்களுக்கு எதுவுமே நடக்கவில்லை.நாங்கள் கிட்டத்தட்ட 62 ஆயிரம் ஏக்கர் காணிகளை இழந்து இருக்கின்றோம்.ஆனால் தமிழ் மக்களுக்கு வடக்கு மற்றும் மட்டக்களப்பில் ஏதாவது காணி பிரச்சினை வந்தால் அதற்காக எல்லோருமே ஒற்றுமையாக போராடி நிறைய விடங்களை சாதித்திருக்கின்றார்கள்.இன்றும் கூட தமிழ் மக்களின் பிரதேசங்களில் காணிகள் கையகப்படும் சந்தரப்பங்கள் இருந்து வருகின்ற நிலையில் அதற்கு காரணமானவர்களை ஒன்று கூடி அவர்கள் விரட்டி அடிக்கின்றார்கள்.ஆனால் அம்மக்களிடம் இருக்கின்ற ஒற்றுமை எங்களிடத்தில இல்லை.

ஆனால் எமது ஊர்கள் யாவும் தற்போது ஒரு தனியான தீவுகளாக மாற்றப்பட்டுள்ளன.இவ்வாறான பிரதேச வாதங்களினால் தான் வெளியூர் தலைவர்கள் என கூறப்படுபவர்கள் இங்கு வந்து எமக்கு மேல் நின்று கொண்டு எங்களது பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்கள் வித்தியாசமான அரசியலை செய்கின்றார்கள்.இதற்கு பிரதான காரணம் பிரதேசவாதமாகும்.எனவே தான் ஒவ்வொரு கிராமமும் தனித் தனியாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.

ஆகவே எதிர்கால சந்ததிகளுக்காகவது நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும்.தற்போது தலைவர் அஸ்ரப் உருவாக்கிய கட்சியில் மன்னிப்பு எல்லாம் கொடுக்கின்றார்கள்.எதற்காக மன்னிப்பு கொடுக்கப்படுகின்றது.யார் கொடுக்கின்றார்கள்.மன்னிப்பிற்கான விழுமியங்கள் எமது மார்க்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால் அவ்விழுமியங்களை மதிக்காது பொதுமன்னிப்பு வழங்கப்படுகின்றது.எதற்காக பொது மன்னிப்பு கொடுக்கின்றார்கள்.கட்சியின் கொள்கைளை மீறியதற்காக சமூகத்தையும் கட்சியையும் ஏமாற்றி ஒரு தனி நபர் செயற்படுவது என்பது எமக்கு ஏமாற்றமளிக்கின்றது என குறிப்பிட்டார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேர்தல் என்கின்ற விடயம் தொடர்பாக ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார்.அத்துடன் இக்கூட்டத்துக்கு வருகை தந்த பொதுமக்களிடம் கட்சியின் பிரதான கொள்கை மற்றும் எதிர்கால தேர்தல் குறித்தும் ஹசன் அலி விரிவாக விளக்கமளித்தார்.

இதன் போது சமகால அரசியல் குறித்து தெளிவுகளைப்பெற்ற அனைவரும் தத்தமது கருத்துக்களை தெரிவித்ததுடன் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் உள்வாங்கி அவற்றை தனது குறிப்பு புத்தகத்தில் எழுத்தில் எழுதி கொண்டதையும் காண முடிந்தது.

;கூட்டத்தில் கட்சி முக்கியஸ்தர்களான சரீப் முகமட் ஹக்கீம் மற்றும் ஏ.எம் அஹூவர் ஆகியோர் இணைந்திருந்தனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles