இந்தோனேசிய கடற்படைக் கப்பலான கிரி பங் டோமோ – 357 நேற்று எரிபொருள் நிரப்பும் விஜயமாக கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது.
கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
குறித்த கப்பல் 111 பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது.
கப்பலின் பணியாளர்கள் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தளங்களையும் பார்வையிட்டிருந்தனர்.