கொங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர்.
தாது வளம் நிறைந்த கொங்கோவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோமா நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எம்.23 கிளர்ச்சிக்குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரு வாரத்தில் மட்டும் 773 பேர் வரையில் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமின்றி, கோமா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 8 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.