31 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிளிநொச்சியில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரை திர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்ட இருவரும் இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது இலஞ்சம் வழங்கியதாக குறிப்பிடப்படும் அறுபதாயிம் ரூபா பணம் சான்றுப் பொருளாக மன்றில் ஒப்படைக்கப்பட்டது.
கிளிநொச்சி, உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் அனுமதி பெறாமல் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பில் அதிகாரிகள் இருவர் மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய் லஞ்சம் கோரியதுடன் இதில் முதற்கட்டமாக நேற்று குறித்த கட்டிட உரிமையாளரால் 60,000 ரூபா இலஞ்சமாக வழங்கப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது,

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles