கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்தில், கடந்த 2023 ஆம் ஆண்டில், காலநிலைக்கு சீரமைவான விவசாய நடவடிக்கையில் சிறப்பாக செயற்பட்ட விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர். வேல்ட் விசன் நிறுவனம் மற்றும் இந்திரா குழுமம் என்பன இணைந்து, காலநிலைக்கு சீரமைவான விவசாய நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்குடன், செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு, கண்டாவளை பிரதேசத்தில், குறித்த செயற்றிட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட விவசாயிகள், பணப்பரிசில், சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்வில் பிரதேச விவசாய போதனாசிரியர், கிராம சேவையாளர், வேல்ட் விசன் நிறுவன உத்தியோகத்தர்கள், இந்திரா குழும அலுவலர்கள், பிரதேச விவசாயிகள் என பலர் பங்கேற்றனர்.