25 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிளிநொச்சி வைத்தியசாலையில் அவசர நோயாளர்கள் பெரும் சிரமங்களில்!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் போதிய மயக்க மருந்து நிபுணர், சத்திர சிகிச்சை நிபுணர் மற்றும் கதிரியக்க நிபுணர்களின்மை காரணமாக சனி ஞாயிறு ஆகிய நாட்களில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அவசர நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் யாழ் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்படும் அவல நிலை உருவாக்கியுள்ளது.
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கான போதிய ஆளணி வெற்றிடங்கள் நீண்ட காலமாக நிரப்பபடாத நிலை கானப்படுகின்றது.
மாவட்ட பொது வைத்தியசாலையானது கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு அப்பால் வவுனியா மன்னர் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கும் சிகிச்சை வழங்கும் ஒரு பிரதான வைத்தியசாலையாக காணப்படுகிறது.
குறிப்பாக வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற ஏ-09 நெடுஞ்சாலையின் வவுனியா வைத்தியசாலையிலிருந்து சுமார் 78 கிலோ மீற்றர் தொலைவிலும் யாழ்ப்பாணத்திலிருந்து 63 மீற்றர் தொலைவிலும் அமைந்துள்ள ஒரு பிரதான வைத்தியசாலையாகவும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை காணப்படுகிறது.
இந்த நிலையில் இரண்டு மயக்க மருந்து நிபுணர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணரும்;, இரண்டு சத்திர சிகிச்சை நிபுணர்கள் இருக்க வேண்டிய நிலையில் ஒரு சத்திர சிகிச்சை நிபுணரும் உள்ளதுடன், கதிரியக்க நிபுணர்கள் எவரும் இல்லாத நிலை காணப்படுகிறது. இதனை விட கதிரியக்கவியலாளர்கள் இரண்டு பேர் இருக்க வேண்டிய நிலையில் ஒருவர் மாத்திரமே உள்ளார்.
இதனால் சனி ஞாயிறு தினங்களில் குறித்த சேவைகள் இடம்பெறுவதில்லை.
இதனால் குறித்த தினங்களில் அனுமதிக்கப்படும் அவசர நோயாளர்கள் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நிலை காணப்படுகிறது.
ஏ-09 நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் விபத்துக்களால் காயமடைவோர் அதிகளவில் அனுமதிக்கப்படுவதனால் மேற்படி வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு நெருக்கடிகள் எதிர்கொள்ளப்படுகின்றது.
இவ்வாறு இந்த வைத்தியசாலையில் வெற்றிடமாக காணப்படுகின்ற வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

மோசமாக பந்து வீசிய சாம் கரன்

மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 2006ஆம் ஆண்டு லீட்ஸ்...

நாடு கடத்தப்பட்ட 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சீரற்ற காலநிலை: மலையக மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மலையக பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் வாழும் மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்துகொடுப்பதற்கு அனர்த்த முகாமைத்துவ பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...

மோசமாக பந்து வீசிய சாம் கரன்

மேற்கு இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 9.5 ஒவர்களில் விக்கெட் எதுவும் வீழ்த்தாது 98 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து அதிக ஓட்டங்களை வழங்கிய பந்து வீச்சாளர் என்ற பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். 2006ஆம் ஆண்டு லீட்ஸ்...

நாடு கடத்தப்பட்ட 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள்!

இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் நீண்ட காலமாக வீசா இன்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 35 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நேற்று குவைத்திலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இக்குழுவினர் நேற்று...

பாடசாலை கல்வி முறைமையில் மாற்றம்!

பாடசாலை தரங்களின் எண்ணிக்கையை 13 இல் இருந்து 12 ஆகக் குறைப்பதற்கு முன்மொழியப்பட்டிருப்பதாக உத்தேச புதிய கல்வி மறுசீரமைப்பை வெளியிட்டு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.பாராளுமன்றத்தில் சபை முதல்வர் கல்வி அமைச்சர்...

ஹோட்டல் விருந்து கொலையில் முடிந்தது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...