கிளிநொச்சி சுண்டிக்குளம் கல்லாறு வித்தியாலயத்திற்கு, இன்று, போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை சமூகத்தினால், ஈழவர் குழுமத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, லண்டனில் உள்ள நோர்விச் தமிழ் பாடசாலையினால், 2 இலட்சத்து 74 ஆயிரம் ரூபா பெறுமதியில், போட்டோ கொப்பி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த இயந்திரத்தை, வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஜெகதீசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் எனஸ்ரின் ஆகியோர், பாடசாலை சமூகத்திடம் கையளித்தனர்.