25 C
Colombo
Sunday, December 4, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஏறாவூர் நகரசபைக்கு விஜயம்

ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நழிமின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் ஏறாவூர் நகரசபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் எம்.எஸ்.நழிம், மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.பிரகாஷ், ஏறாவூர் நகரசபை உறுப்பினர்களான எஜ்.டி.எம் ஜெமில், எஸ்.எம் ஜப்பார், எம்.ஸ் றியாழ்,
எஸ்.சுதாகராசா, எம்.எஸ்.ஏ கபூர், யு.சுலைஹா, கே சபிதா உம்மா, எ.ம்.சப்றா, ஏறாவூர் நகரசபை செயலாளர் ஹமீம், கணக்காளர் புஷ்ரா, நிருவாக உத்தியோகத்தர் நபிறா றசீன், ஏறாவூர் பொலிஸ்நிலைய பதில் பொறுப்பதிகாரி, ஆளுநரின் செயலாளர், உட்பட நகரசபை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நகரசபை செயற்பாடுகளை அவதானித்து வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, ஏறாவூர் நகரசபைக்கு சொந்தமான புதிய சந்தை கட்டட தொகுதிகளையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ். நழிம் அவர்களினால் சபையில் ஒப்பந்த நாளாந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு சபையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு உள்வாங்கும் முகமாக மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதோடு வருகை தந்த ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களுக்கு தவிசாளரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

Related Articles

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் நிறுத்தம்!

குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் தவிர்த்துவருவதாக மின் பொறியாளர்கள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்றிரவு முதல்தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர்...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு, மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, A,...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் மழை!

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலைய செயற்பாடுகள் நிறுத்தம்!

குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகளை அதிகாரிகள் தவிர்த்துவருவதாக மின் பொறியாளர்கள் சங்கம் குற்றம்சுமத்தியுள்ளது.களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின்னுற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகள் நேற்றிரவு முதல்தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர்...

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளதோடு, மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அதன்படி, A,...

உடனடியாக நிறுத்தப்படும் அரிசி இறக்குமதி!

அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.நேற்று (03) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை...

கொக்குவிலில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!

கொக்குவில் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.தாவடி, மதுபானச்சாலைக்கு அண்மையில் இந்த வாள்வெட்டு சம்பவம் நடந்தது.மதுபோதையில் இரு தரப்பினர் மோதிக் கொண்டனர். பின்னர் கலைந்து...