லெபனானின் கிழக்கு பகுதியான பால்பெக் நகரில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனம், லெபனான் நாடுகளில் செயற்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்கும் செயற்பாடுகளில், இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகின்றது.
பாலஸ்தீனத்தில் கடந்த ஒருவருடத்தில், 43 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
லெபனானில் 2 ஆயிரத்திற்கும் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானின் கிழக்கு பகுதியான பால்பெக் நகரில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.
இந்நகரை ஒட்டிய பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பண்டைய ரோமாபுரி காலத்து கோயில் ஒன்றும் உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
காசா பகுதியில் அகதிகள் முகாங்களில் உள்ளோருக்கு உணவு மற்றும் மருந்து சப்ளை செய்வதை தடுக்கும் நோக்கில் ஐ.நா அமைப்புக்கு, இஸ்ரேல் தடை விதித்துள்ளமைக்கு, ஐ.நா கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
இந்த தடையை அகற்றாவிட்டால், சர்வதேச சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக, ஐநா எச்சரித்துள்ளது.