இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மா அவர்களின் 104வது பிறந்ததினம் இன்றாகும்.1916ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15-;திகதி மதுரையில் பிறந்தவரே மதுரை சண்முகவடிவு சுப்புலக்ஷ்மி.
பின்னாளில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி எனவும், எம்.எஸ். அம்மா எனவும் கர்நாடக இசை உலகில் தமக்கென ஒரு முத்திரை பதித்தவரே இந்த இசை மேதை.
அறுபதுகளின் ஆரம்ப பகுதியில் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி இலங்கைக்கு விஐயம் செய்து யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார்.
இன்றிருப்பதுபோல அன்று இசை நிகழ்வுகளை நடத்தக்கூடிய மண்டபங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கவில்லை.யாழ்ப்பாணம் மனோகரா தியேட்டர் அரங்கே அப்போது கலைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது.
இந்த அரங்கிலேயே எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுடைய கர்நாடக இசைக்கச்சேரி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.அன்றைய யாழ்ப்பாணம் இசைவடிவமாகவே காட்சியளித்த காலமாகும். இந்திய-இலங்கை கலைஞர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இசைவிருந்தளித்தனர்.
இந்திய கலைஞர்களின் யாழ்ப்பாண விஐயம் ஒரு வரப்பிரசாதமாகவே நோக்கப்பட்டிருந்த காலமாகவே அன்று காணப்பட்டது.
எனவே எம்.எஸ். சுப்புலக்ஷ்;மி அம்மா அவர்களுடைய கர்நாடக இசைக்கச்சேரியும் அன்று மிகப்பிரமாதமாகவே மனோகரா தியேட்டர் அரங்கில் களை கட்டியிருந்தது.
அவரது இசை நிகழ்ச்சி இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளை யாழ்ப்பாணத்தில் பெரும் மழைபொழிவும் காணப்பட்டிருந்தது.
அப்போது எம்.எஸ். அம்மாவின் கானமழைக்கு ஆசீர்வாதமாக வர்ணபகவானும் மழைபொழிகின்றான் என ரசிகர்கள் மகிழ்ந்தனர்.
எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவின் யாழ்ப்பாண விஐயத்தின் போது கீரிமலை புனித தீர்த்த தடாகப்பகுதிக்கும் அவரை அழைத்துச் சென்றனர் அவரது ரசிகர்கள்.
அங்கே பெண்களுக்குரிய கேணியில் நீராடிவிட்டு வெளியேவந்து எம்.எஸ். அம்மா தனது தலைக்கூந்தலையை உலர்த்தியவராக எதிரே காணப்பட்ட வங்காள விரிகுடா கடலின் அழகை ஒரு கல்லின் மீது அமர்ந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தாராம்.
அப்போது எம்.எஸ். அம்மாவின் வருகையை அறிந்த அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் சிலர் அவரிடம் வந்து ‘அம்மா நாம் செய்த பாக்கியமே நீங்கள் இங்கே வந்திருப்பது. எமக்காக ஒரு பாடலாவது பாடுங்கள்’ எனக்கேட்டார்களாம்.
அப்போது மிக வாஞ்சையோடு பணிவாக இசையரசி எம்.எஸ். அம்மா தாம் பாடி நடித்த திரைப்படமான மீரா’ விலிருந்து காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலைப்பாடி அங்கு நின்றவர்களை மகிழ்வித்;தார்.
ஏம்.எஸ். அம்மாவை அவரது இறதி நாட்களில் கம்பவாரிதி இ.nஐயராஐ; ஒரு தடைவ சென்னையில் சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பின் ஞாபகார்த்தமாக எம்.எஸ் அம்மாவிடம் எதையாவது தரும்படி கம்பவாரிதி இ . nஐயராஐ கேட்டிருந்தார்.அப்போது தனது கையில் வைத்திருந்த ஓலை விசிறியை அவருக்கு அன்பளிப்பாக எம்.எஸ் அம்மா வழங்கியிருந்தார்.
அந்த விசிறியை இன்றுங்கூட கொழும்பு கம்பர் விழா இசை அரங்கில் கம்பவாரிதி இ. nஐயராஐ; நல்லமுறையில் காட்சிப்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் ஐவகர்லால் நேரு எம்.எஸ் அம்மாவை புகழ்ந்த விதமே தனித்துவமானது.ஓர் இசையரசிக்கு முன்பாக நான் வெறுமனே ஒரு பிரதம மந்திரியே என நேருஐp கூறியிருந்தார்.2004 ம் ஆண்டு டிசம்பர் 16 ம் திகதி 88-வது வயதில் இசையரசி எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா தனது இவ்வுலக வாழ்வை நீத்தார்.