குருணாகல் டி.பி.வெலகெதர மத்திய கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன மற்றும் முழுமையான நூலகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின்படி ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்த சகல வசதிகளுடனும் கூடிய நூலகம் வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கைக்கான சீனத் தூதரகம் இதற்கு நிதியுதவி வழங்கியுள்ளது.
டி.பி. வெலகெதர மத்திய கல்லூரியில் 2000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்பதோடு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளுக்கும் மேலதிக கல்வியை பெறுவதற்கு உதவியாக பல புத்தகங்கள், டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அறிவைப் பெறுவதற்கான உபகரணங்கள், இணைய வசதிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சி மற்றும் பல மின்னணு சாதனங்களும் இந்த நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் நீர்கொழும்பு துவ கனிஷ்ட கல்லூரி மற்றும் நவகத்தகம கொங்கடவல கல்லூரி ஆகிய இரண்டு பாடசாலை நூலகங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.
நூலகத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதரக பிரதித் தூதுவர், வடமேல் மாகாண ஆளுநர் தீபிகா.கே.குணரத்ன மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.