குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியூடான போக்குவரத்து பாதிப்பு!

0
107
மரம் முறிந்து வீழ்ந்தமையினால், குருணாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு பெய்த கடும் மழைக்காரணமாக, குறித்த வீதியின் மெல்சிறிபுற பகுதியில், பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதனால் அந்த வீதியூடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மரத்தை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.எனவே, சாரதிகள் தற்காலிகமாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளது.