நுவரெலியா மாவட்டம் லிந்துலை விவசாய சங்கத்தின் கீழ் டயகம, அக்கரப்பத்தனை, லிந்துலைப் பகுதியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இவர்கள் விவசாயத்தின் முலம் கிடைக்கின்ற வருமானத்தையே எதிர்பார்த்து வாழ்ந்து வருகின்றனர்.
குறைந்த விலையில் தமது மரக்கறி வகைகளை கொள்வனவாளர்கள் கொள்வனவு செய்வதால் தாம் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் தாம் முதலீடு செய்த பணத்தைக்கூட மீளப்பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.