பன்வில – ஹாகல அரச பெருந்தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு இலக்கானதில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான ஆண்கள் இருவரும், பெண் ஒருவரும் மடுல்கலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஆண் தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் தவலந்தென்ன பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய ஒருவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏனைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் பன்வில காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.