விசா இல்லாமல் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இலங்கையர்கள் கொண்ட குழு அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (29) அதிகாலையில் அனுப்பப்பட்டனர்.
விசா இல்லாமல் குவைத்தில் தங்கி பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்த இந்த இலங்கையர்கள் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகள் மற்றும் தடுப்பு மையங்களில் தடுத்து வைக்கப்பட்டு, நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்தின் தலையீட்டால் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்தக் குழு, குவைத்திலிருந்து ஷார்ஜாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து ஏர் அரேபியா விமானம் G. 9 – 587 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வியாழக்கிழமை (29) அதிகாலை 04.30 மணிக்கு அனுப்பப்பட்டது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரி ஒருவர், அவர்கள் வீடு திரும்புவதற்குத் தேவையான பணத்தை வழங்கி, அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தார்.
