கேரளத்தில் 2 லொரிகளில் கடத்தி வரப்பட்ட 100 கிலோ கஞ்சா போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதுதொடா்பாக 4 பேரை கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திரத்தில் இருந்து 100 கிலோ கஞ்சா போதைப் பொருள் மற்றும் 3 கிலோ ஹாஷிஷ் எண்ணெய் ஆகியவற்றை இரண்டு லாரிகளில் ஏற்றிக்கொண்டு, கோழி ஏற்றிச்செல்லப்படுகிறது என்ற பெயரில் இவா்கள் நான்கு பேரும் கேரளத்துக்கு கடத்திவந்தனா்.
அவற்றை சோதனை செய்த அதிகாரிகள், திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரியாஸ், ஜசீம் மற்றும் கொன்னியைச் சோ்ந்த கோனி மற்றும் திருச்சூரைச் சோ்ந்த ஃபைசல் ஆகிய நால்வரும் கைது செய்து, அவா்கள் கடத்திவந்த ரூ. 4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் மற்றும் இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் கன்டெய்னா் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ. 20 கோடி மதிப்பிலான 500 கிலோ கஞ்சா போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு முன்பு கைப்பற்றி, இருவரை கைது செய்தனா்.