இந்தியா கேரள மாநிலத்தில் நிபா வைரசினால் பாதிக்கப்பட்ட இளைஞன் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
24 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அவருடன் நேரடி தொடர்பிலிருந்த 26பேர் மஞ்சேரி மருத்துவக் கல்லூரி வைத்தியசாலையில் கண்காணிப்பில் உள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
உயிரிழந்த இளைஞன் கர்நாடகா மாநிலம் பெங்களுரில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அங்கு அவருடன் தொடர்பிலிருந்த யாருக்காவது இந்நோய் அறிகுறிகள் உள்ளதா என்பதையும் கண்டறியுமாறு அம்மாநில சுகாதாரத்துறை இயக்குனரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.