நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோன தொற்றுக் காரணமான இன்றைய தினம் (7) நான்கு பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் இந்த வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் தொகை 34 ஆக அதிகரித்திருக்கின்றது.
covid-19 தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் இலங்கையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர்கள் அசேல குணவர்தன சற்றுமுன் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றுக்குள்ளான கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் அவரது வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
இவர் நீண்ட நாள் இருதய நோயால் பீடிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இருதய நோய் உடன் கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இவரது மரணம் சம்பவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரும் கொவிட் 19 தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
இவர் பல்வேறு நீண்ட கால நோய்களினால் பிடிக்கப்பட்டு உள்ளதாகவும் நோய் நிலைமை தீவிரம் அடைந்த காரணத்தினால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவரின் மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுடன் நிமோனியா ஏற்பட்டதாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 67 வயதுடைய ஆண் ஒருவரும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளார்.
இவர் நீண்ட நாள் நோய் நிலைமை ஒன்றினால் பிடிக்கப்பட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் கடந்த சில தினங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுடன் நியூமோனியா நிலை உருவானதன் காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் கனேமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
இவர் மினுவாங்கொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் என தெரிவிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட இவர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நோய் நிலை தீவிரமடைந்ததால் கொழும்பு ஐ.டிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19, நிமோனியா உடன் இரத்தம் விஷம் அடைந்ததாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி இலங்கையில் covid-19 தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்