சீனா உருவாக்கிவரும் கொரோனா வைரஸ் மருந்திற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்கியதும் அந்த மருந்தினை இலங்கைக்கு வழங்குவதாக சீனா உறுதியளித்துள்ளது.
கொவிட்19க்கு எதிராக உருவாக்கப்படும் மருந்து தொடர்பில் இலங்கைவிடுத்தவேண்டுகோளிற்கு சீனா சாதகமான பதிலை வழங்கியுள்ளது என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் விசேட பிரதிநிதிகள் குழுவினர் பிரதமர் மகிந்த ராஜபக்சவைசந்தித்த வேளை அவர் இந்தவேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இலங்கையின் வேண்டுகோளுக்கு சீனா சாதகமான பதிலை வழங்கியது என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனாவிற்கு எதிரான மருந்து உருவாக்கப்பட்டு உலக சுகாதாரஸ்தாபனம் அதற்கான அனுமதியை வழங்கியதும் இலங்கையுடன் மருந்து விடயத்தில் ஒத்துழைப்பது குறித்து அவர்கள் சிந்திப்பார்கள் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.