கொழும்பு மற்றும் தெரிவுச் செய்யப்பட்ட பல நகரங்களில் மாடி கார் பூங்காக்களை நிர்மாணிப்பதற்கான கலப்பு மேம்பாட்டு செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தினமும் பயணிக்கும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக இவ்வாறான கார் பூங்காக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திறந்த போட்டி கொள்முதல் செயன்முறை மூலம் தெரிவுச் செய்யப்பட்ட முதலீட்டாளர்களால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கான யோசனை அடங்கிய அமைச்சரவை பத்திரத்தை நகர அவிருத்தி மற்றும் வீட்டு வசதிகள் அமைச்சரான பிரதமர் அமைச்சரவையில் முன்வைத்த நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய கொழும்பு நகரத்தில் பல மாடி கார் பூங்காக்கள் உருவாக்கப்படவுள்ளதுடன் பத்தரமுல்ல, அனுராதபுரம் மற்றும் கண்டி ஆகிய 8 இடங்களில் அரச தனியார் ஒத்துழைப்பு திட்டமாக இது செயற்படுத்தப்படவுள்ளது.
இது திட்டத்தின் முதலாவது யோசனையாகும்.
இரண்டாவது யோசனையாக நாரஹென்பிட்டிய, புறக்கோட்டை டெலிகாம் கார் தரிப்பிடம்,, கொழும்பு 07 ஓட்டர் (எஸ்) ஸ்போர்ட்ஸ் கழக இடம் உள்ளிட்ட ஏனைய பொருத்தமான இடங்களில் கார் பூங்காக்களை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
திட்டத்திற்காக செலவிடப்படும் பணத்தை ´முன் விற்பனை அடிப்படையில்´ திரட்டிக்கொள்ள ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 07 கின்சி அவென்யூவில் சாதாரண பல மாடி கார் பூங்காக்கள் மற்றும் இயந்திர கார் பூங்காக்களை அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.