கொழும்பு கோட்டை – தலைமன்னார் இடையிலான தொடருந்து சேவை மீள ஆரம்பம்

0
40

கொழும்பு கோட்டை முதல் தலைமன்னாருக்கு இடையிலான தொடருந்து சேவை இன்று முதல் மீள ஆரம்பமாகிறது. 

மஹவ மற்றும் அநுராதபுரம் வரையிலான தொடருந்து மார்க்க அபிவிருத்தி காரணமாகக் குறித்த தொடருந்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

இதன்படி, நாளாந்தம் கொழும்பு கோட்டையிலிருந்து பிற்பகல் 4.15க்கு சேவையை ஆரம்பிக்கும் தொடருந்து இரவு 10.15க்கு தலைமன்னாரை சென்றடையும். 

தலைமன்னாரிலிருந்து அதிகாலை 04.15க்கு சேவையை ஆரம்பிக்கும் தொடருந்து முற்பகல் 10.15க்கு கொழும்பு – கோட்டையை வந்தடையும் எனத் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.