பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘பிஎன்எஸ் சமுத்திர ஜெய்’ என்ற போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
குறித்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.
115.2 மீற்றர் நீளம் கொண்ட ‘பிஎன்எஸ் சமுத்திர ஜெய்’ போர்க்கப்பலில் மொத்தம் 274 உறுப்பினர்கள் பணியாற்றகின்றனர். கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் ஷஹ்ரியார் ஆலம் கடமையாற்றுகிறார்;.
இந்த போர்க்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
அத்துடன், கப்பலின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கடற்படையினருக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சியும் கப்பலுக்குள் நடைபெற்றது.
பிஎன்எஸ் சமுத்திர ஜெய்’ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாளை நாட்டில் இருந்து புறப்படவுள்ளது.