கொழும்பு துறைமுக கொள்கலனில் தீ விபத்து

0
20

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பண்டாரநாயக்க குவே IV (BQ IV) முனையத்தில் கொள்கலன் ஒன்றில் நேற்று வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து சம்பவம் நேற்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தீயை அணைக்க, கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு அலுவலகம்  உடனடியாக கடற்படை கட்டளை செயல்பாட்டு அறையை தொடர்புகொண்டு உதவியை நாடியுள்ளது.

அதனையடுத்து, இலங்கை கடற்படையானது அதன் இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (CBRN) பிரிவினர் தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ளனர்.

அவ்வேளை, கடற்படைக் குழுவானது கொள்கலனின் பூட்டைத் திறந்து, அதில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுத்தம் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களின் ஒரு பகுதி தீப்பிடித்ததைக் கண்டறிந்தது. 

அதனையடுத்து, துறைமுக பணியாளர்கள் மற்றும் துறைமுக தீயணைப்புப் படையினரின் ஆதரவுடன் அந்த இரசாயனப் பொருட்கள் பாதுகாப்பாக வெளியே கொண்டுவரப்பட்டு, தீ மேலும் பரவுவதற்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.