32 C
Colombo
Friday, April 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

கொழும்பு நெருக்கடியும் பாரபட்சங்களின் சாட்சியும்?

கொழும்பு நெருக்கடி இன்னும் ஓயவில்லை. கோட்டா கோ ஹோம் – போராட்டக்காரர்கள், காலிமுகத்திடலில் நிலைகொண்டிருக்கும் வரையில், இலங்கையின் நெருக்கடி ஏதோவொரு வகையில் காட்சிப்படுத்தப்பட்டுக்
கொண்டேயிருக்கும். தற்போது, குறித்த பகுதியில், தங்களது போராட்டத்தின்
அடையாளமாக, நினைவுத் தூபியொன்றை நிறுவும் பணியில் போராட்டக்
காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற மக்கள் கலகங்களின் விளை
வாக, ஆளும் பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகள் பலரின் வீடுகள்
தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. மஹிந்த ராஜபக்ஷவின் மெதமுதன வீடு,
மற்றும் டி. ஏ. ராஜபக்ஷ நினைவிடம் ஆகியவும் தீக்கிரையாக்கப்பட்டிருக்
கின்றன. உண்மையில் இந்த வன்முறைகள் அனைத்துக்கும் மூலகாரணம்
மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு அடியாட்கள்தான். அவர்கள் காலிமுகத்திடல்
அமைதி போராளிகளை தாக்க முற்பட்டதன் விளைவாகவே, நிலைமைகள்
மிகவும் குறுகிய நேரத்தில் தலைகீழானது. மக்கள் தன்னிச்சையாக வீதி
களில் இறங்கினர். பொலிஸாரும் தாக்கப்பட்டனர்.
சிங்கள மக்கள் அரசியல்வாதிகளை தாக்குகின்றனர் – அவர்களது
உடைமைகளை எரிக்கின்றனர். கோபம் கொண்ட மக்கள் உலகெங்கும்
இப்படித்தான் போராடியிருக்கின்றனர். இதற்கு மிகவும் சமீபத்தைய உதா
ரணம், அமெரிக்காவில் இடம்பெற்ற கறுப்பின மக்களின் போராட்டமாகும்.
ஒரு பொலிஸாரின் அத்துமீறலால் ஒரு கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதைத்
தொடர்ந்து, அமெரிக்காவில் வன்முறைகள் வெடித்தன. பொதுச் சொத்துக்கள்
பல தீக்கிரையாக்கப்பட்டன. ஆனால், இலங்கையில், ஆளும்தரப்பு அரசி
யல்வாதிகள் அத்துடன், ஏனைய அரசியல்வாதிகளும் இலக்கு வைத்துத்
தாக்கப்படுகின்றனர்.
மக்கள் தங்களுக்குத் தெரிந்த வழியில்தான் செயல்படுவார்கள். தெரிந்த
வார்த்தைகளின் வழியாகத்தான் பேசுவார்கள். அப்படித்தான் இப்போது –
பொருளாதார சுமைகளால், மோசமாகப் பாதிக்கப்பட்ட சாதாரண மக்கள்
வீதிகளுக்கு வந்திருக்கின்றனர். இதே மக்கள்தான், சிங்கள ஆட்சியாளர்
களால் காலத்துக்குக் காலம், அவர்களின் அரசியல் ஆதாயத்துக்காக, தமிழ் மக்களுக்கு எதிராகவும் தூண்டிவிடப்பட்டவர்கள். கிட்டத்தட்ட 1983 – தமிழ்
மக்களுக்கு எதிரான வன்முறைகளின்போது, எவ்வாறான அணுகுமுறைகள்
பின்பற்றப்பட்டதோ, அதையே, இப்போது, சிங்கள அரசியல்வாதிகளுக்கு
எதிராக செய்கின்றனர். மஹிந்தவின் ஆதரவாளர்களை, அரை நிர்வாண
மாக்கி, வீதிகளில் கட்டிவைத்திருக்கின்றனர்.
ஆனால், இந்த வன்முறைகளும், கலகங்களும் பிறிதொரு விடயத்தையும்
துல்லியமாக காட்சிப்படுத்தியிருக்கின்றது. அதாவது, இந்த நாட்டின் பொலிஸ்
மற்றும் படைத்துறைகள் எந்தளவு இன மயப்படுத்தப்பட்டிருக்கின்றது –
என்னும் உண்மையும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றது. சிங்கள மக்கள்
கோபம் கொண்டு வெளியில் வந்திருப்பதை அமைதியாக பார்த்துக் கொண்
டிருக்கும் சிறீலங்கா பொலிஸ், படைத்துறைகளும், வடக்கு – கிழக்கில் தமிழ்
மக்கள் தங்களின் கோபங்களை அமைதிவழியில் வெளிப்படுத்தும்போது,
இவ்வாறு நடந்துகொள்வதில்லை.
அச்சுறுத்தல், மறைமுகமான மிரட்டல்கள் மூலம் மக்களின் போராட்டங்
களை அடக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். ஆனால்,
சிங்கள மக்களின் எழுச்சியென்று வருகின்றபோது, சிங்களபொலிஸ், சிங்
கள படைத்துறையாகவே அவர்கள் மாறிவிடுகின்றனர். ஏனெனில்,
ஆவேசம் கொண்டு, வீதிகளில் இறங்கியிருக்கும் சிங்கள மக்கள் மீது
எவரும் பயங்கரவாத முத்திரை குத்தவில்லை. ஏனெனில், அது முடியாது.
ஆனால், இதுவே தமிழர்கள் என்றால் – உடனடியாகவே தமிழ் இளை
ஞர்கள்மீது, பயங்கரவாத முத்திரைகள் பாய்ந்திருக்கும். இன்று, காலி
முகத்திடலில் நினைவுத் தூபியை சிங்கள இளைஞர்கள் நிர்மாணிக்க முயற்
சிக்கின்றனர். அதனை படைத்துறைகள் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்
றன. ஆனால், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒரு
நினைவு தூபியை நிறுவியபோது, ஆட்சியாளர்கள் எவ்வாறு நடந்து கொண்
டனர். பல்கலைக்கழக நிர்வாகம் இரவோடு இரவாக, நினைவு தூபியை,
அகற்றியது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles