இந்த ஆண்டு இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இணையத்தினூடாக மாத்திரம் கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆம் திகதி பிற்பகல் 12 மணிக்கு பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதிகளை நீடிக்க எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சை திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.