ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரித்து, தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், இரா.சாணக்கியனின், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி அலுவலகத்தில், நேற்றைய தினம் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இலங்கை தமிழரசு கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் இதில் பங்கேற்றனர்.