வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை, ஜின்னாபுரம் மற்றும் முல்லைத்தீவு கடற்பரப்புகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் 17 முதல் 45 வயதுகளுக்கிடையிலானவர்கள் என்பதோடு, கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.