ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 22 ஆவது போட்டியில் ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளும் மோதிக் கொண்டன. இதில் ஐதராபாத் அணி 69 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
202 ஓட்டங்கள் இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய பஞ்பாப் அணி 17 ஓவர்களில் வெறும் 132 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணி 11 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் சரிந்தது. அணியின் தொடக்க வீரர் மயங்க் அகர்வால் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த சிம்ரன் சிங் 11 மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவர் எட்டு பந்துகளில் இரு பவுண்டரிகள் அடித்து 11 ஓட்டங்களை எடுத்தார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தாலும், அந்த அணியின் பூரன் நின்று ஆடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசினார். அவர் வெறும் 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்த தொடரில் மிக விரைவாக எடுக்கப்பட்ட ஒரு அரை சதமாக இது உள்ளது.
11ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை கடந்தபோது அந்த அணி நான்காவது விக்கெட்டை இழந்தது.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்தாலும் பூரனின் ஆட்டம் அந்த அணிக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இருந்தது.
ஆனால் பூரன் 77 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் சன் ரைஸர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வோர்னர் மற்றும் பேர்ஸ்டவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
டேவிட் வோர்னர் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை அடித்து அதிரடியாக தொடங்கினார்.
10 ஆவது ஓவரில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார் பேரிஸ்டோவ். வோர்னர் பாரிஸ்டோவ் கூட்டணி 100 ஓட்டங்களை கடந்தது. இருப்பினும் 97 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பாரிஸ்டோவ் ஆட்டமிழந்தார்.
அதன்பின் வோர்னர் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.
வோர்னர் பாரிஸ்டோவ் கூட்டணியை 16ஆவது ஓவரின் முயற்சித்து உடைத்தது பஞ்சாப் அணி அதன்பின் வந்தவர்கள் தங்களது பங்கிற்கு ஓட்டங்களை சேர்த்து அந்த அணி ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்களை எடுத்தது.
இந்த போட்டியின் மூலம் ஐதராபாத் அணி தனது மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
பஞ்சாப் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறது. புள்ளிகள் பட்டியலில் அந்த அணி கடைசி இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.