பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பாலின சர்ச்சைக்கு ஆளான அல்ஜீரிய நாட்டு குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃப் தங்கம் வென்று சாதித்துள்ளார்.
இமானே கெலிஃப் ஆண் தன்மைக்குரிய ஹோர்மோன் அதிகம் இருப்பதாக ஏற்கனவே சர்ச்சை கிளம்பியது. இமானேவுக்கு ஆதரவாக ஒலிம்பிக் கமிட்டி துணை நின்றது.
இந்நிலையில், தனது பாலினம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அனைவருக்கும் பதிலடிக் கொடுக்கும் வகையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.