31 C
Colombo
Saturday, September 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

சர்தார் 2 படப்பிடிப்பின் போது உயிரிழந்த சண்டை பயிற்சியாளர்!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’.  தீபாவளியை முன்னிட்டு வெளியான இந்தப் திரைப்படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இத்திரைப்படத்தில் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

இதில் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் கார்த்தி நடித்திருந்தார்.  இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  அந்த வகையில், ‘சர்தார் 2’  திரைப்படத்தின் பணிகள் ஜுலை 12ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. ‘சர்தார் 2’ திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடித்து வருவதாக தகவல் வெளியாகியது.  நேற்று சாலிகிராமத்தில் நடைபெற்ற இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.

பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  ஆனால், சண்டை பயிற்சியாளர் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்த சம்பவத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.  இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த நிலையில், உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் ஏழுமலை உடலுக்கு நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles