வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில், சர்வதேச சிறுவர் தினமான இன்றைய தினம், மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்புப் போராட்மொன்று முன்னெடுக்கப்பட்டது. சிறுவர்களும் இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்தனர்.
இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலைசெய்தவன் யார்?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே இறந்துகொண்டு இருக்கின்றோம், கையளிக்கப்பட்ட சகோதரங்கள் எங்கே? போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.