சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ள, சுனிதா வில்லியம் மற்றும் புச் வில்வோர் ஆகியோர், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க
ஆர்வம் கொண்டுள்ளனர்.
பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு, கடந்த ஜூன் 5ம் திகதி பயணித்த, இவர்கள் இருவரும்,
தாம் பயணித்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பூமிக்குத் திரும்ப முடியாது, சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியுள்ளனர்.
நேற்றைய தினம், அங்கிருந்து, ஊடகவியலாளர் சந்திப்பொன்றைய நடாத்திய போNது, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கவுள்ளதான தமது
விருப்பினை வெளிப்படுத்தினர்.