25 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

சித்திரவதைக்குட்படுத்தப்பட்டமைக்கு நீதியான விசாரணை வேண்டும்!ஈ,சரவணபவன்,

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சித்திரவதைக்குட்படுத்தப்ட்டு உயிரிழந்த சித்தன்கேணி இளைஞனுக்கு நீதியான விசாரணை முன்னெடுக்கபடவேண்டும்
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி தலைவருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவிப்பு
பொலிசாரின் தடுப்புக்காவல் கொலைகள் எந்த ஒரு இடத்திலும் இறந்தவர்களுக்கான நீதி நிலைநாட்டபடவில்லை.இந்த இடத்திலும் நீதி நிலைநாட்டபடாது போய்விடும் என்ற அச்சம் தான் எமக்கு எழுகின்றது .ஏனென்றால் பொலிஸ் திணைக்களத்தினை தமிழ் மக்கள் தமக்குரிய பாதுகாப்பான திணைக்களமாக ஒரு பொழுதும் கருதியது கிடையாது .அந்த பொலிஸ் திணைக்களம் சிங்கள பெளத்த பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கின்ற ஒருதிணைக்களமாக தான் தமிழ் மக்கள் பார்த்து வருகின்றார்கள்.தமக்கு பிச்சை போடுகின்ற ஏவாலாளர்களின் கட்டளையினை நிறைவேற்றுகின்ற திணைக்களமாக தான் மக்கள் அதனை அவதானித்து வருகின்றார்கள் . அவ்வாறானதொரு திணைக்களம் தமிழ் மக்களின் நீதியை நிலைநாட்டும் என்பதில் எந்த ஒரு துளியும் நம்பிக்கை இல்லை இந்த சம்பவத்தில் தெட்டதேளிவாக அவர் உயிரிழப்பதற்கு முதல் வழங்கிய வாக்குமூலம் சரி உறவினர்களின் வாக்குமூலம்சரி அனைத்துமே அவர் பொலிசாரது தடுப்பு காவலில் அவர் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதில் சந்தேகதிற்கிடமின்றி காணப்படுகின்றது.

இங்கே பொலிசார் இருவர் விசாரணைக்காக இடமாற்றம் செய்யபடுதல் என்பது ஒரு வழமையான விடயம் அதாவது விசாரணைக்கான ஆரம்ப நடைமுறை விடயம் ஆனால் இங்கே ஒரு சம்பவத்தின் அதிரவலை எழுகின்ற பொழுது அதன் கண்துடைப்புக்காக நகர்த்தி விட்டு பின்னர் மக்கள் அதனை கடந்து செல்லுகின்ற பொழுது அதனை அப்படியே பேசாது விடுகின்றமையே இங்கே நடந்து வருகின்றது.அதாவது தண்டனையிலிருந்து தப்பிக்கும் கலாசாரத்தினை தான் பொலிஸ் திணைக்களம் செய்துவருகின்றது.இந்த விடயத்தில் நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராட முனைகின்றோம்.

பொலிசாருடைய செயற்பாட்டினை எந்த வகையிலும் நியாயபடுத்த முடியாது .அவர் சந்தேகநபராக இருந்தாலும் நீதிமன்றம் தீன்பளிக்கும் வரை அவர் சந்தேக நபர் தான் .சந்தேகநபர் ஒருவர் மீது பொலிசார் சித்திரவதை செய்யலாம் என்ற எந்த ஒரு அதிகாரமும் இல்லை .தமிழர்கள் என்ற காரணத்திற்காக அத்துமீறி செயற்படுகின்றார் கொழும்பில் கூட அண்மையில் ஒரு தமிழ் பெண்மணி பொலிஸ் தடுப்பு காவலில் இறந்திருந்தார். தமிழ் மக்கள் மீதான சத்தம் இல்லாத அட்டூழியத்தை பொலிசார் நிகழ்த்தி வருகின்றனர்

இங்கே நாம் வெறுமனே அறிக்கைகளை வெளியிடுவதிலேயோ அல்லது கண்டன குரல் எழுப்புதுடனோ இதனை கடந்த போகமுடியாது முழுமையான விசாரணை முடியும் வரைக்கும் நாங்கள் அனைத்து தரப்புக்களும் முழுமையான நீதிவிசாரணை முடியும் வரை எல்லாதரப்புக்களும் அவதானம் செலுத்த வேண்டும்.வித்தியாவின் படுகொலை வழக்கில் எவ்வாறு தொடர்சியாக நீதிக்கான போராட்டம் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டபட்டதோ அவ்வாறு இங்கும் நீதி நிலை நாட்டபடவேண்டும்

Related Articles

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!

அனுராதபுரம் பாதெனிய வீதியில் அம்பன்பொல பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான...

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!

அனுராதபுரம் பாதெனிய வீதியில் அம்பன்பொல பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான...

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக...

ராஜபக்ச குடும்பத்துக்கு உரிய தண்டனை கிடைத்தே தீரும்- சஜித்

எனது உயிரை பறித்தாலும் ராஜபக்ச திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை...

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி பதுளை, நுவரெலியா,...